×

உலகக் கோப்பையின் முடிவில் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்ய வாய்ப்பு: ரிக்கி பாண்டிங் கருத்து

துபாய்: உலகக் கோப்பையின் முடிவில் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் உலகக்கோப்பை தொடர் இந்த மாதம் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.8) இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 200 ரன்களை துரத்தியபோது 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கியது. அப்போது களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, ராகுலுடன் இணைந்து வழக்கம்போல் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இந்த போட்டியில் விராட் கோலி 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் உலகக் கோப்பையின் முடிவில் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி 282 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 47 சதங்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையாக 49 சதங்களை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 3 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இன்னும் எட்டு ஒருநாள் போட்டிகள் உள்ள நிலையில், சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் கோலி, சச்சினின் சாதனையை எட்ட பாண்டிங் ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்;

“அவர் நிச்சயமாக 2 சதங்களைப் பெறுவார் என்று நான் நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையின் முடிவில் சச்சினின் சாதனையை முறியடிக்கவில்லை என்றாலும் சமன் செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது 5,517 ரன்களை எட்டிய பிறகு, இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற டெண்டுல்கரின் சாதனையை கோலி ஏற்கனவே முறியடித்துவிட்டார்.

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அடித்த 47 சதங்களில் 26 சதங்கள் சேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்களாகும். அதில் 22 சதங்கள் இந்திய அணியை வெற்றியடைய செய்துள்ளது. ஒருநாள் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலக்கைத் துரத்துவதற்குத் தேர்ந்தெடுக்கும் முதல் பேட்ஸ்மேன் கோலி தான் என பாண்டிங் உறுதியாகக் கூறினார்.

The post உலகக் கோப்பையின் முடிவில் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்ய வாய்ப்பு: ரிக்கி பாண்டிங் கருத்து appeared first on Dinakaran.

Tags : Kohli ,Sachin ,World Cup ,Ricky Ponting ,Dubai ,Ricky ,Goalie ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!