×

வேலூர் அருகே அதிகாலை ஆசிட் பேரல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தது: தேசிய நெடுஞ்சாலையில் ‘ஆசிட் ஆறு’

வேலூர்: வேலூர் அருகே ஆசிட் பேரல்கள் ஏற்றி சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். திருப்பூரில் இருந்து சென்னை நோக்கி ஆசிட் பேரல்கள் ஏற்றிய லாரி வேலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவிச்சந்திரன்(50) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பெருமுகை அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக மண் தடுப்பு மற்றும் பேரிகார்டுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதிய லாரி, சாலை நடுவில் குறுக்காக கவிழ்ந்தது. இதில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஆசிட் பேரல்கள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் பேரல்களில் நிரப்பப்பட்டிருந்த ஆசிட் முழுவதும் சாலையில் ஆறாக வழிந்து ஓடியது.

லாரி டிரைவர் ரவிச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர், தூக்க கலக்கத்தில் மேம்பால பணிக்காக மண் தடுப்பு, பேரிகார்டு தடுப்புகள் இருப்பதையோ, பக்கவாட்டில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருப்பதையோ கவனிக்காமல் வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் நெடுஞ்சாலையின் நடுவில் ஆசிட் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலூர் அருகே அதிகாலை ஆசிட் பேரல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தது: தேசிய நெடுஞ்சாலையில் ‘ஆசிட் ஆறு’ appeared first on Dinakaran.

Tags : Vellore ,Acid River ,National Highway ,Lorry ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...