×

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு

டெல்லி: கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தன்னுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். ஹமாஸ் படையினருடன் போர் நடத்திவரும் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் துணை நிற்பதாக உறுதி அளித்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மிகுந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்’ பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது. போர் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நான்காவது நாளாக இன்றும் தொடரும் இந்த போரில், இரு தரப்பிலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1200ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு, தூதரகம் வாயிலாக மேற்கொண்டு வருகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா தனது ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தன்னுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஹமாஸ் படையினருடன் போர் நடத்திவரும் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் துணை நிற்பதாக உறுதி அளித்தார். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என மோடி தெரிவித்திருக்கிறார்.

The post இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Benjamin Netanyahu ,Delhi ,Narendra Modi ,Indians ,Israel ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!