×

புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழி வகைகள் உள்ளன: ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து

சென்னை: ஆளுநரின் எண்ணித் துணிக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் மனநல ஆரோக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதாவது:
நம் நாட்டில் 50 லட்சம் பேராவது ஆட்டிசம் பாதிப்பால் சிரமப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உங்களை பாராட்டுகிறேன். புத்தி என்பது நம் ஐந்து புலங்கள் மூலம் நாம் உணர்வது. உடல் சார்ந்து, அறிவு சார்ந்து மற்றும் ஆன்மீகம் சார்ந்து என்று தான் உள்ளோம். மன நலம் பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம். இப்போது தாய், தந்தை குழந்தைகள் அருகில் இருந்தும் சமூக வலைத்தளங்கள் பிரித்து வைக்கின்றன. உங்கள் மனதை எப்படி கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதற்கு யோகா உதவும்.

இந்தந்த யோகா செய்தால் தான் சரி என்று இப்போது பல விளம்பரங்கள் எல்லாம் வருகிறது. ஆனால் யோகா நமக்கு வலி ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்வதில் தான் எந்த ஒரு பிரச்சனையும், நிகழ்வும் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்காது. உங்களால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்யுங்கள், உங்களால் தான் எல்லாம் முடியும் நீங்கள் தான் எல்லாம் என்று எண்ணம் இருக்க கூடாது.

அமைதியான அல்லது ஆக்ரோஷமான போர், சிறிது அல்லது பெரிய போர் பல நேரங்களில் நம்முடன் நாமே போரிட்டு கொள்கிறோம். நம்மை நாம் எப்படி சரியாக வைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழி வகைகள் உள்ளது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும். நாம் சொல்ல வரும் அர்த்தங்களை சரியாக பொருந்தும் சொற்களை கொண்டு பேச வேண்டும். நம் பழமையான மொழிக்கு ஆங்கிலத்தில் விளக்கம் தேட முயல்கிறோம், நம் மொழியை பேச தயக்கம் காட்டுகிறோம்.

ஜி20 கூட்டம் நடந்த போது, நாம் எப்போதும் போல் இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாசுதேவ குடும்பகம் என்ற பெயரில் நடத்தினார்கள் இது பிரதமர் சொன்னது அல்ல பல ஆண்டுகள் முன் வந்தது. 2020 தேசிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை சிறப்பாக கையாள்வதற்கான வழிகள் உள்ளது. புதிய வழிகளில் மன நல பாதிப்பு உள்ளவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வதற்கு என் பாராட்டுக்கள். நீங்கள் சிறந்த சேவையில் ஈடுபட்டு வருகிறீர்கள். இவை நம் கடமையும் கூட, நம் அண்ணன், தங்கை யாருக்கு பராமரிப்பு தேவைப்படுகிறதோ அதனை கொடுக்க வேண்டும்.

The post புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழி வகைகள் உள்ளன: ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து appeared first on Dinakaran.

Tags : Governor R.N. Ravi ,CHENNAI ,Governor's Counting Ceremony ,Governor ,House ,Guindy, Chennai ,R.N. Ravi ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...