×

புவனகிரி வேதபுரீஸ்வரர், வளையமாதேவி கோயில்களில் வரும் டிசம்பருக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவில் மற்றும் வளையமாதேவி திருக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு கடந்த 1960ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 63 ஆண்டுகளுக்குப் பிறகு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கான திருப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும். அதேபோன்று, வளையமாதேவி திருக்கோவிலை புனரமைக்க 31 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளும் விரைவில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.

The post புவனகிரி வேதபுரீஸ்வரர், வளையமாதேவி கோயில்களில் வரும் டிசம்பருக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuvanagiri Vedapureeswarar ,Rangkamadevi Temples ,Minister ,Shekharbabu ,Chennai ,Assembly ,Vedapureeswarar ,temple ,Rangamadevi temple ,Bhuvanagiri ,Kudamuzku ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...