×

வந்தவாசியில் இடம் வழங்கப்படுமானால் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், வந்தவாசி தொகுதியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு முன் வருமா என வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்(திமுக) கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1962 முதல் செயல்பட்டு வருகிறது.

தற்போது ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உயர்ந்துள்ளது., சங்கத்தில் 36 வகைகளில் காதி கிராப்ட், அரசு மருத்துவமனைகள் சர்வோதய சங்கங்கள், அரசு பள்ளிகள், கல்லூரி விடுதிகள் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் வாரியத்தால் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள். இச்சங்கத்தின் பாய் வகைகள் கதர் வாரியத்தின் வழிகாட்டுதலின்படி உரிய வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை 228 கோடியில் இருந்து 427 கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், திருநெல்வேலி மாவட்டம் பட்டமடை கிராமத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஒரு பாய் உற்பத்தி செய்யும் சங்கம் உள்ளது
வந்தவாசியிலும் சிறுபான்மையினர் சார்பில் அதிக நபர்கள் வசிக்கிறார்கள் எனவும், இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும்” என்றார்.

The post வந்தவாசியில் இடம் வழங்கப்படுமானால் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Minister ,Rajakannappan ,Chennai ,Legislative ,Assembly ,Koraibai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை