×

கோவை சக்தி சாலையில் மழைநீர் வடிகாலை அகற்றிய ஃப்ரோசோன் மால் வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு: கோவை மாநகராட்சி எச்சரிக்கை

கோவை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களை தனியார் நிறுவனமான ஃப்ரோசோன் மால் அகற்றியுள்ளது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அந்த மழைநீர் வடிகால்களை அக்ற்றியதற்கு ஃப்ரோசோன் மாலுக்கு பலமுறை நோட்டிஸ் அனுப்பியும் எவ்வித பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளது. அதன்பிறகு எச்சரிக்க நோட்டிஸை மாநகராட்சி அனுப்பியுள்ளது.

அந்த நோட்டிஸில் கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 21 க்கு உட்பட்ட சத்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலினை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களது நிறுவனம் சேதப்படுத்தி உள்ளீர். இச்செயல்களுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்த பொழுது அதனை வாங்க மறுத்தும் உள்ளீர்,

எனவே இக்கடிதம் பெறப்பட்ட இரு தினங்களுக்குள் சேதப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகாலனை சரி செய்யவும். மாநகராட்சி மூலம் விதிக்கப்பட்ட அபராத்தினை உடனடியாக செலுத்தும் படி இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தங்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் தங்களது வணிக வளாகத்தில் செயல்படும் கடைகள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

The post கோவை சக்தி சாலையில் மழைநீர் வடிகாலை அகற்றிய ஃப்ரோசோன் மால் வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு: கோவை மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Frozone Mall ,Coimbatore Shakti Road ,Coimbatore Corporation ,Coimbatore ,Northeast Monsoon ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்