×

பாய்லர் வெடித்து சேதமடைந்த பால் குளிரூட்டும் நிலையம்: வாயு கசிவால் கண் எரிச்சல்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலப்பட்டி பிரிவு என்ற இடத்தில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறப்படும் பால் இங்கு குளிரூட்டப்பட்டு மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை பால் குளிரூட்டும் நிலையத்தில் நீராவி கொதிகலன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் பால் குளிரூட்டும் நிலையம் சேதமடைந்தது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் பாய்லரில் இருந்து அமோனியம் குளோரைடு வாயு கசிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றவர்களுக்கும், சுற்று வட்டாரப் பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பாய்லர் வெடித்து சேதமடைந்த பால் குளிரூட்டும் நிலையம்: வாயு கசிவால் கண் எரிச்சல் appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Trichy District Manaparai ,Balapatti Division ,Trichy Dindigul National Highway ,
× RELATED டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது