×

காசா மக்களை பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தல்

இஸ்ரேல்: காசா மக்களை பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. வாய்ப்பு இருக்கும்போது, ராஃபா வழியாக எகிப்துக்கு தப்பிச்செல்ல இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் அறிவுறுத்தியுள்ளார்.

காசா, இஸ்ரேலுடன் எல்லை கொண்டது, அதனால் இஸ்ரேல் தங்களது எல்லையை மூடியுள்ளது. காசா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச சமூகம், இந்த தாக்குதலை கவனமாகவும் சர்வதேச சட்டங்களின்படியும் மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இவ்வகையான அறிவுறுத்தல்கள் வரும்போது இஸ்ரேலிய ராணுவத்தின் சார்பாக அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் கூறுகையில்; வாய்ப்பிருக்கும்போதே காசா மக்கள் எகிப்துக்கு தப்பி செல்லுங்கள், காசா எல்லை திறந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து எகிப்துக்கு செல்லக்கூடிய ஒரே வழியான காசா எல்லை திறந்திருப்பதால் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு இஸ்ரேலிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த யுத்தம் நீண்டதாக இருக்கும், யுத்தத்தின் முடிவில் மத்திய கிழக்குப்பகுதி வேறு மாதிரியாக இருக்கும், காசாவை ஒருவழி செய்யாமல் விடமாட்டோம் என பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு கடுமையாக தெரிவித்தார்.

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாககாசா மக்கள் சுமார் 23 லட்சம் பேர் சிறிய நிலப்பரப்பில் சிக்கி தவித்து வருகின்றனர்.

The post காசா மக்களை பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Israeli ,Gazans ,Egypt ,Israel ,Israeli army ,Gaza ,Rafah ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...