×

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு ‘தோழி விடுதி’ அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன்; மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னை, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கீதா ஜீவன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Geetha Jeevan ,Chennai ,Tamil Nadu.… ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...