×

பீச்சாட்டூர் ஏரியில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கியது

ஊத்துக்கோட்டை: தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர்  திறப்பால், ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கியது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியாகும். தற்போது, 279.71 மில்லியன் கன அடி உள்ளது. 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில், நேற்று 280 மில்லியன் கன அடிக்குமேல் நீர் இருப்பு அதிகமானதால் தண்ணீர்  திறக்கப்பட்டது.  பின்னர், பிச்சாட்டூர் ஏரிக்கு மழைநீர் 550 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு காலை 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 9 மணிக்கு 2000 கன அடியும், பிற்பகல் 3600 கன அடியும், மாலை 7.30 மணி அளவில் 11 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டன. இந்த தண்ணீர் தற்போது நாகலாபுரம், நந்தனம், காரணி வழியாக சுருட்டபள்ளி அணைக்கு வந்து நிரம்பி வழிந்து, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் செல்கிறது. தற்போது, ஊத்துக்கோட்டை தரைபாலம் வெள்ள பெருக்கு காரணமாக தண்ணீரில் மூழ்கியது.  இதனிடையே, ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் பஸ் போக்குவரத்து புதிய பாலத்தின் மீது விடப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்….

The post பீச்சாட்டூர் ஏரியில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Peechatur Lake ,Oothukottai ,Bichatur Lake ,Andhra Pradesh ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...