×

2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி பரிந்துரை

துபாய்: 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி பரிந்துரை அளித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் தந்தால் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் தொடர் மீண்டும் அறிமுகம் செய்வது குறித்தான பேச்சுவார்த்தை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதற்கான திட்டம் குறித்து ஐசிசி மூலம் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1998ல் கோலாலம்பூரிலும், 2022ல் பர்மிங்காமிலும் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. 1900இல் பாரிசில் நடைபெற்ற லிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்து அணி பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும் பட்சத்தில் டி20 போட்டியாக நடைபெறலாம் என ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

The post 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Los Angeles Olympic Organizing Committee ,International Olympic Committee ,2028 Olympic Games ,Dubai ,Dinakaran ,
× RELATED ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை