×

அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு.. போரை நாங்கள் முடித்து வைப்போம் என பிரதமர் நெதன்யாகு சூளுரை!!

ஜெருசலேம் : பாலஸ்தீனம் உடனான போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி அதிகாலை இஸ்ரேல் நகரங்கள் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அத்துடன் இன்றும் பல ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நகரங்களில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 8ம் தேதி போர் தொடங்குவதாக அறிவித்த இஸ்ரேல், தற்போது காசா நகரம் மீது இடைவிடாது குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்திய தாக்குதல் மற்றும் நகரங்களுக்குள் ஊடுருவி சென்று, ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 900க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மறுபுறத்தில் காசா மீது இஸ்ரேலிய வான் படை நடத்தி வரும் தாக்குதலில் 687க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது,”பாலஸ்தீனம் உடனான போரை நாங்கள் தொடங்கவில்லை; ஆனால் நாங்கள் போரை முடித்து வைப்போம்
போரை நாங்கள் விரும்பவில்லை; ஆனால் எங்கள் மீது வன்முறையான வழியில் திணிக்கப்பட்டுள்ளது; எங்களை தாக்கியதன் மூலம் ஹமாஸ் படை வரலாற்று தவறை செய்துள்ளது; அதற்கான விலையை பெறுவார்கள்,’என்றார். இதனிடையே ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹமாஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளை உலகமே கண்காணித்து வருகிறது.ஹமாஸின் தாக்குதலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று 200 பேர் கொல்லப்பட்டுள்ளார்.வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.தனது நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து காக்க போராடி வரும் இஸ்ரேலுக்கு துணை நிற்போம,’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு.. போரை நாங்கள் முடித்து வைப்போம் என பிரதமர் நெதன்யாகு சூளுரை!! appeared first on Dinakaran.

Tags : United ,States ,Israel ,Netanyahu ,JERUSALEM ,Benjamin Netanyahu ,Palestine ,United States ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்