×

மதுரை ரயில்வே கோட்ட புதிய மேலாளர் பதவி ஏற்பு

மதுரை, அக். 10: மதுரை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக சரத் வத்சவா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பதவி தொடர்பான ஆணைக்காக காத்திருக்கும் தற்போதைய கோட்ட மேலாளர் பத்மநாதன் அனந்த், சரத் வத்சவாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த சரத் வத்சவா, அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டக்கல்வி பயின்றவர். இவர் இந்திய ரயில்வே பணி 1996 ஆண்டு பிரிவை சேர்ந்தவர்.

மதுரைக்கு வருவதற்கு முன்பாக புதுடில்லி ரயில்வே வாரியத்தில் பொது போக்குவரத்து வர்த்தக பிரிவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார். வடக்கு ரயில்வேயில் மொரதாபாத் கோட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகவும், மத்திய ரயில்வே இணை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை ரயில்வே கோட்ட புதிய மேலாளர் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Railway Division ,Madurai ,Sarath vatsava ,Dinakaran ,
× RELATED மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ண தடைகோரி மனு