×

மாணவர்களுக்கு மேம்பாடு வழி நடத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மேம்பாடு மற்றும் வழி நடத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி துணைத்தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் விவசாய பிரிவு தலைமை மேலாளர் நாகூர்அலி ஜின்னா, அகத்தியர் உழவர்உற்பத்தியாளர் மன்ற நிறுவனர் யோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரகுசந்தர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் புதுடெல்லியில் செயல்படும் பூசா இன்ஸ்டிடியூட் உதவி பொதுமேலாளர் வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வருங்காலத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு மண்ணையும், தண்ணீரையும் நல்ல முறையாக விட்டு செல்ல வேண்டும். மாணவர்கள் தங்களது வெற்றியை தலையில் ஏற்றி கர்வம் கொள்ளக்கூடாது, அதே நேரத்தில் தோல்வியை மனதில் வைத்து கொள்ளகூடாது. இந்த இரண்டையும் தவிர்த்து தாங்கள் நினைத்த செயல்களில் தொடர்ந்து முயற்சி செய்தால் வளர்ச்சியும், மேன்மையும் அடையலாம்

The post மாணவர்களுக்கு மேம்பாடு வழி நடத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Musiri ,MIT College of Agriculture and Technology ,Trichy ,Dinakaran ,
× RELATED உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி...