×

நீடாமங்கலம் அருகில் ஆற்றில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணி தீவிரம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் நாகையிலிருந்து தஞ்சாவூர் வரை வரை சாலையை பராமரித்து சாலை அமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலையின் அருகில் பெரிய பள்ளங்கள் உள்ள இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று நீடாமங்கலம் அருகில் உள்ள வையகளத்தூர் மேம்பாலம் அருகில் வெண்ணாற்றிலும், ஒளிமதி அருகிலும் விபத்துகளை தடுக்க ஆற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

The post நீடாமங்கலம் அருகில் ஆற்றில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Nagai-Mysore National Highway ,Tiruvarur district ,Nagai ,Thanjavur ,Dinakaran ,
× RELATED கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்