×

விராலிமலையில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா

விராலிமலை: விராலிமலை சோதனைச்சாவடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவபடத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் விராலிமலை ஒன்றிய செயலாளர் மாதுராப்பட்டி துரை தலைமை வகித்தார். இதில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நகர ஒன்றிய பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

The post விராலிமலையில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Emmanuel Sekaran ,Viralimalai ,Tamil Nadu ,Immanuel Sekaran ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் விசாக திருவிழா விடையாற்றியுடன் நிறைவு