×

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

 

ஆண்டிபட்டி, அக்.10: தேனி அருகே கேரளாவில் இருந்து தேவதானப்பட்டி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கேரள மாநிலம், மூணாறு அருகே கல்லாறு என்னும் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த ராஜாங்கம்(58). முருகேஸ்வரி(53) மற்றும் அவரது மகன் ராஜேஷ்குமார்(32) ஆகியோர் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

கோடாங்கிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே காரை நிறுத்தி அனைவரும் வெளியேறினர். இதனால் காரில் இருந்த அனைவரும் எந்த காயமும் இல்லாமல் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திடீரென தீப்பிடித்து எரிந்த கார் appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Kerala ,Devadanapatti ,Theni.… ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா