×

கரூர் தென்னிலை அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்து

க.பரமத்தி: க.பரமத்தி அடுத்த தென்னிலை அருகே கார் விபத்தில் ஒருவர் சாவு 3 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ் (61), சபரிநாதன் (62), ஜெரால்டு (62) ஆகிய மூவரும் ஊரில் இருந்து ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டு கோவையை நோக்கிபுறப்படனர். கார் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. காரை ஜேசு மகன் பிரபாகரன்(51) என்பவர் ஓட்டிவந்தார். தென்னிலை அடுத்த எல்லைக்காட்டு வலசுபிரிவு அருகே வந்தபோது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோசப்செல்வராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கரூர் தென்னிலை அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Karur Thenilai ,Baramathi ,Thenilai ,Thanjavur ,Karur Thennilai ,Dinakaran ,
× RELATED க.பரமத்தியில் ஒன்றிய அரசுக்கு எதிராக பிரசார தெருமுனை கூட்டம்