துரைப்பாக்கம்: ராஜிவ்காந்தி சாலையில் பெருங்குடி – எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, பெருங்குடி – துரைப்பாக்கம் வரை உள்ள சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் போக்குவரத்து உதவி கமிஷனர் திருவேங்கடம் மற்றும் போக்குவரத்து போலீசார் மேற்கண்ட பகுதி சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்ட கடைகள் மற்றும் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுனர் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சக்கர வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.
The post போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
