×

ராணுவ கல்லூரியில் சேர டிசம்பர் 2ம் தேதி தேர்வு: கலெக்டர் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேர்வதற்கான தேர்வு நாடு முழுவதம் குறிப்பிட்ட சில மையங்களில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத்தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் 248 003’’ என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி, பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பெற்றுக் கொள்ளலாம், என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post ராணுவ கல்லூரியில் சேர டிசம்பர் 2ம் தேதி தேர்வு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Army College ,Chennai ,Tamil Nadu Government Staff Selection Commission ,Rashtriya Indian Army College ,Dehradun ,
× RELATED டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட...