×

பாளையில் நாளை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நெல்லை, அக். 10: நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நாளை (11ம் தேதி) நடைபெற உள்ளதாக மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமையில் நாளை (11ம் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகை, மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் இக்கூட்டத்தில் இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை, செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்று கருத்துகள் வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post பாளையில் நாளை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai East District DMK ,Working ,Committee ,Palai. ,Paddy ,Palai Maharajanagar ,Nella East District DMK Executive Committee ,Palai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்