×

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு சமையலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பயிற்சி அரங்கில், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, சமையல் கலை, சுகாதாரமாக சமைத்தல், தீ விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்புடன் சமைத்தல் மற்றும் சமசீர் சரிவிகித உணவு தயாரித்தல் போன்றவை குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் அனைவரையும் வரவேற்றார். இதில் தீயணைப்புத் துறையினர், சத்துணவு சமையல் செய்யும்போது ஏற்படும் தீயை கட்டுப்படுத்தி அணைப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். இதனைத்தொடர்ந்து, சத்துணவு கூடத்தினை தூய்மையாக வைப்பது குறித்தும், சுகாதாரமாக உணவு சமைப்பது குறித்தும், சரிவிகித உணவுகளை பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு வழங்குவது குறித்தும் பயிற்சி அளித்தனர். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, சத்துணவு பணியாளர்கள் செயல்படுவது குறித்து வல்லுனர்களால் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குப்பட்ட சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு சமையலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Achirpakkam Union ,Madhurandakam ,Achirupakkam Union ,Chengalpattu District ,Achirpakkam Panchayat Union Office ,
× RELATED காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம்