×

வில்லியம்பாக்கம் பகுதியில் பாலாற்றில் கொட்டப்படும் சலூன் கடை தலை முடிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு: வில்லியம்பாக்கம் பாலாற்றில் பல்வேறு பகுதிகளில் சலூன் கடையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான தலை முடிகளை கொட்டியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த, வில்லியம்பாக்கம் பாலாற்று குடிநீரை ஒரகாட்டுபேட்டை, காவிதண்டலம், கரும்பாக்கம், காவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடித்து வருகின்றனர். வில்லியம்பாக்கம் பாலாற்றில் தலை முடிகளை குவியல் குவியலாக கொட்டியுள்ளதால் பாலாறு பாதுகாப்பு கேள்வி குறியாக மாறியுள்ளது.

எனவே, வில்லியம்பாக்கம் பாலாற்றில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள சலூன் கடையில் இருந்து கொண்டு வந்து, தலை முடிகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், ஏற்கனவே கொட்டியுள்ள முடிகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே அகற்றி பாலாற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வில்லியம்பாக்கம் பகுதியில் பாலாற்றில் கொட்டப்படும் சலூன் கடை தலை முடிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Williambockam ,Chengalpattu ,Williampakkam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை