×

எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு: டெல்லி ஐகோர்ட் இன்று விசாரணை

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் புதிய மனு தாக்கல் செய்திருந்த மனுதாரர்,’ சொந்த பிரச்சனைக்காக அதிமுக என்ற கட்சியை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பிரித்து விட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சிவில் சூட் வழக்கின் இறுதி உத்தரவு வரும் வரையில் அதிமுக விவகாரங்களில் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது உட்பட அனைத்து நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

The post எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு: டெல்லி ஐகோர்ட் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Edabadi Pannisami ,Delhi ICourt ,New Delhi ,Secretary General ,Edapadi ,Panisami Akkadsi ,Supreme General Assembly ,Dinakaraan ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...