×

மைதானம் மோசம்…பட்லர் அதிருப்தி

பயிற்சியின்போது ஆடுகளம் மற்றும் மைதானத்தை நேற்று பார்வையிட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது: புற்களே இல்லாமல் மண் பரப்பாக உள்ள ஆடுகளம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எங்கள் வீரர்கள் இங்கு விளையாடும்போதும், டைவ் அடிக்கும்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே மோசமான இந்த மைதானத்தில் ரன்னை தடுப்பதற்காக டைவ் செய்வதை தவிர்க்கலாம். எப்போதும் களத்தின் மோசமான தன்மையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள்.

அதற்காக களத்தில் நிற்கும் நீங்கள், ஓடும் பந்தை பார்த்ததும் அதை தடுக்க டைவ் அடிப்பது இயல்பான விஷயம்தான். இதுபோன்ற மைதானம், ஆடுகளத்தில் ஆட்டத்தை நடத்த எப்படி முடிவு செய்தார்கள் என்றே தெரிவியவில்லை… என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதே சமயம், ஞாயிறன்று தர்மசாலா ஆடுகளத்தை ஆய்வு செய்த ஐசிசி ஆலோசகர் அட்கின்சன், ‘தர்மசாலா ஆடுகளம் வசதியாகத்தான் உள்ளது. போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்தும் இதைதான் சொன்னார்’ என்று கூறியுள்ளார்.

தர்மசாலாவில் சனிக்கிழமை நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிப் உர் ரகுமான் டைவ் செய்தபோது காயம் ஏற்பட்டதையும் பட்லர் உதாரணமாக தெரிவித்துள்ளார். வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ரங்கனா ஹெராத், ‘தர்மசாலா மைதானத்தில் பீல்டிங் செய்யப் போகிறவர்களுக்கு டைவ் அடிக்க வேண்டாம் என்று அணித் தரப்பில் எந்த ஆலோசனையும் இதுவரை வழங்கப்படவில்லை. இனியும் அப்படி சொல்லும் யோசனையும் இல்லை. வீரர்கள் 100 சதவீதம் உழைக்கிறார்கள். எனவே அவர்களால் முடிந்ததை செய்யச் சொல்வோம்’ என்றார்.

The post மைதானம் மோசம்…பட்லர் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : England ,Jos Butler ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து