×
Saravana Stores

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் உணவு பொருள் கண்காட்சி

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் உணவு பொருள் கண்காட்சியை கற்பக விநாயகா கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் உணவு தொழில் நுட்பத்துறை சார்பில், உணவு பொருள் கண்காட்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், கல்லூரி நிர்வாக இயக்குநர் மணி, கல்லூரி முதல்வர் மனு வேல்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். உணவு துறையின் முதல்வர் அருணா வரவேற்பு பேசினார்.

சிறப்பு விருந்தினராக கற்பக விநாயகா கல்லூரியின் பேராசிரியர் கார்த்திக்கேயன் கலந்துகொண்டு, உணவு பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு உணவு முறைகள், உணவின் முக்கியத்துவம், உணவு தொழில் மற்றும் உணவும், தொழில் நுட்பத்துறையின் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான உணவு பொருட்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர்கள், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் உணவு பொருள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Food Fair ,Thanalakshmi Srinivasan College ,Kanchipuram ,Karthikeyan ,Karpaka Vinayaka College ,Mamallapuram.… ,
× RELATED தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில்...