×

அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்

சென்னை: அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக வரும் 17ம் தேதி 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17, 18 மற்றும் 26, 28 ஆகிய நான்கு தேதிகளில் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

The post அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,52nd Annual Inaugural General Meeting ,Chennai ,Dinakaran ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...