×

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேற்கு காளையார்கரிசல்குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. இவர் நிலத்தை அளந்து கொடுக்குமாறு மேற்கு காளையார்கரிசல்குளம் விஏஓ பாலமுரளியிடம் மனு அளித்தார். அவர் அலைக்கழிப்பு செய்யவே விவசாயி பாகிருஷ்ணன் கேட்டபோது, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக நிலத்தை அளந்து கொடுப்பதாக தெரிவித்தார். அதற்கு பாலகிருஷ்ணன் ரூ.3 ஆயிரம் கொடுப்பதாக கூறிவிட்டு, விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று காலை அலுவலகத்தில் வைத்து விஏஓ பாலமுரளியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ பாலமுரளியை கைது செய்தனர்.

The post ரூ.3,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Thiruchuzhi ,West Kalayarkarisalkulam ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...