×

பெட்ரோல் வாங்க வந்தபோது சிறுவனை ஏமாற்றி செல்போன் பறித்து தப்பிய வாலிபர் கைது

பெரம்பூர்: பெட்ரோல் வாங்க சென்றபோது சிறுவனை ஏமாற்றி செல்போன் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரம் அப்பாதுரை தெரு பகுதியை சேர்ந்தவர் காமேஸ்வரி (34). இவரது மகன் தமிழரசு (13). இவர் மொபட்டுக்கு பெட்ரோல் வாங்குவதற்காக அயனாவரம், குன்னூர் ஹைரோடு காசி விஸ்வநாதர் கோயில் எதிர்புறம் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் சிறுவனிடம் சென்று, ‘’உனது செல்போனை கொஞ்சம் கொடுப்பா, அவசரமாக ஒரு கால்பேசிவிட்டு தருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவன் தனது செல்போனை கொடுத்ததும் பேசுவதுபோல் நடித்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆவடி ஆதிபராசக்தி நகர் பகுதியை சேர்ந்த நவீனை (20) இன்று காலை கைது செய்தனர். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெட்ரோல் வாங்க வந்தபோது சிறுவனை ஏமாற்றி செல்போன் பறித்து தப்பிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai Ayanavaram ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு