×

திருக்குறளின் மீது பற்று கொண்ட அரசுப் பள்ளி தமிழாசிரியை: தேசிய நூலாக அறிவிக்கக்கோரி நூதன சாதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விஏகே நகரை சேர்ந்த உமாராணி கடந்த 24 ஆண்டுகளாக அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருக்குறளை தேசிய நூலக அறிவிக்கக்கோரி புதிய முயற்சியாக அகல் விளக்கு, கைவளையல்.

கழுத்தில் அணியும் மணி மாலை, நாணயங்கள், குடை, தேசியக்கொடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களிலும் 1330 குறட்பாக்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். இதனை அடுத்து ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட், வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது உட்பட இதுவரைக்கும் 70க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றிருக்கிறார்.

The post திருக்குறளின் மீது பற்று கொண்ட அரசுப் பள்ளி தமிழாசிரியை: தேசிய நூலாக அறிவிக்கக்கோரி நூதன சாதனை appeared first on Dinakaran.

Tags : Tirukkural ,Tiruvannamalai ,Umarani ,Arani Town ,VAK Nagar ,
× RELATED ரமணரின் 74ம் ஆண்டு ஆராதனை இளையராஜா இசையஞ்சலி திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில்