×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் திறப்பு தூத்துக்குடியில் ரூ.200 கோடி திட்டங்கள் தொடக்கம்

* அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் * கனிமொழி எம்பி, அமைச்சர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தை திறந்து வைத்து ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.58.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேருந்து நிலையம், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

முன்னதாக தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ரூ.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கணித பூங்காவை (ஸ்டெம் பார்க்) அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி பாலாஜி சரவணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி,

மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம்,தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, ஒன்றியசெயலாளர்கள் புதூர் சுப்பிரமணியன், ஜெயக்கொடி, ஒன்றிய துணை செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கணேசன், நாகராஜ், பகுதி செயலாளர் சிவகுமார், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார்,

மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா,ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலெட்சுமி, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி,

நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, பாலகுருசாமி,பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர இளைஞரணிஅமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர் சிவகுமார் என்ற செல்வின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், ரங்கசாமி, சந்திரபோஸ், கந்தசாமி, இசக்கிராஜா, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு என்ற பாலகுருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் திறப்பு தூத்துக்குடியில் ரூ.200 கோடி திட்டங்கள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Anna Bus Station ,Smart City ,Thothukudi ,Minister ,K. N. Nehru ,Kanilanguage ,Dinakaraan ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...