×

அசாமில் அறுவடை திருவிழாவையொட்டி பிரமாண்ட நடன நிகழ்ச்சி: பாரம்பரிய ஆடைகளை அணிந்து பெண்கள் பேரணி

திஸ்பூர்: அசாமில் அறுவடை திருவிழாவையொட்டி நடைபெற்ற பிரமாண்ட நடன நிகழ்ச்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நம் ஊர்களில் பொங்கல் திருநாள் அறுவடை நாளாக கொண்டாடப்படும் நிலையில் ஜார்கண்ட், பீகார், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரம் பூஜா என்னும் பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அசாமில் விஸ்வநாத் மாவட்டத்தில் கரம் பூஜா திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

பெண்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஊர்வலமாக நடனம் ஆடி வந்து பார்வையாளர்களை பிரமிப்பு ஊட்டினர். பின்னர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி தங்களது பாரம்பரிய நடன நிகழ்வை ஆரங்கேற்றினர். மேள, தாள இசை முழங்கவும், பாடல்களை ஒளிபரப்பியும் அவர்கள் நடனம் ஆடிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிகழ்ச்சியை விஸ்வநாத் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

The post அசாமில் அறுவடை திருவிழாவையொட்டி பிரமாண்ட நடன நிகழ்ச்சி: பாரம்பரிய ஆடைகளை அணிந்து பெண்கள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Assam ,Tispur ,Pongal Thirunal ,Assam harvest festival ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து