×

காளிங்கராயர் அணையில் தண்ணீர் வந்த பிறகு அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் : அமைச்சர் துரைமுருகன்!

சென்னை : காளிங்கராயர் அணையில் தண்ணீர் வந்த பிறகு அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் தமிழக சட்டப்பேரவை, கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக சட்டசபையில் கேள்வி – பதில் நேரத்தில், பேசிய அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், “கடந்த அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 60 ஆண்டுகால விவசாயிகள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 1652 கோடி நிதி ஒதுக்கி 80 சதவீத பணிகள் முடிவந்துவிட்டது. எப்போது அந்த திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்படும் ” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை துவக்கும் அளவுக்கு எல்லா திட்டங்களும் முடிவடைந்துள்ளன. ஆனால் அந்த திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை; ஆகையால் காளிங்கராயன் அணையில் தண்ணீர் வந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்” என தெரிவித்தார்.

The post காளிங்கராயர் அணையில் தண்ணீர் வந்த பிறகு அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் : அமைச்சர் துரைமுருகன்! appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Minister ,Duraimurugan ,Kalingarayar Dam ,Kalingrayar Dam ,
× RELATED பேருந்துகள் நிற்காமல் செல்வதை...