×

பொதுத்துறை வங்கிகளில் அவுட் சோர்சிங், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடை செய்ய வேண்டும்

திருச்சி: ஸ்டேட் பேங்க் முன்னாள் தொழிற் சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் ஏழாவது பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராமன் தலைமை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சந்திரசேகரன், துணைச்செயலாளர் முருகையா, ஸ்டேட் பேங்க் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் குற்றவியல் நீதி சட்ட திருத்தங்களை நாடு தழுவிய அளவில் பொது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் விஷேச சட்டத்தை (ARMED FORCES SPECIAL POWERS ACT) நடைமுறைப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த மத்திய அரசு முன் வர வேண்டும். ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக ‘அவுட் சோர்சிங்’ மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

The post பொதுத்துறை வங்கிகளில் அவுட் சோர்சிங், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Federation of Former Trade Union Leaders ,State Bank ,Trichie ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...