×

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் குண்டர், தடுப்பு காவல் சட்டத்தில் 5 பேர் கைது ஆட்சியர் பழனி உத்தரவு

 

விழுப்புரம், அக். 9: விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் தடுப்பு காவல், குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(எ)மாமணி (30), வில்லியனூரைச் சேர்ந்த அசாருதீன்(25), தினேஷ்(21) ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூன்று பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சஷாங்சாய் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பழனி நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். தொடர்ந்து ஆரோவில் காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதேபோல் மரக்காணம் பகுதியில் காரிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன்(55), ஞானவேல் ஆகிய இருவரும் அப்பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியே வரும் அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யவும் எஸ்பி சஷாங்சாய் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். தொடர்ந்து மரக்காணம் காவல் நிலைய போலீசார் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் குண்டர், தடுப்பு காவல் சட்டத்தில் 5 பேர் கைது ஆட்சியர் பழனி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Collector ,Palani ,Villupuram district ,Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...