×

இடியும் நிலையில் சத்துணவு கூடம்

 

தொண்டி, அக்.9: தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர் நிலைப் பள்ளியின் சத்துணவு கூடம் இடியும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்காக கட்டிய கட்டிடம் பல வருடங்களுக்கு முன்பு கட்டியதால் கீழ் பகுதி அரித்து விழும் நிலையில் உள்ளது.

பாதுகாப்பற்ற நிலையில் பணியாளர்களும் உள்ளனர். விபத்து ஏதும் நடக்கும் முன்பு புதிய சத்துணவு கூடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து எஸ்எம்சி தலைவி பாண்டிச் செல்வி கூறியது, மாவட்டத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளி இதுவாகும். இங்குள்ள சத்துணவு கூடம் எவ்வித வசதியும் இல்லாமல் சிதிலமடைந்துள்ளது. அதனால் புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post இடியும் நிலையில் சத்துணவு கூடம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai Government High School ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து