×

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு காப்பீட்டு திட்டம்

 

உடுமலை, அக்.9: தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு கேரா சுரக்சா காப்பீட்டு திட்டத்துக்கான விழிப்புணர்வு முகாம் பண்ணை கிணறு கிராமம் தோட்டம்பட்டியில் நடைபெற்றது. தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்தமன் தலைமை வகித்தார். இதில் அவர் பேசுகையில், “இந்த காப்பீட்டு திட்டத்துக்கான ஒரு வருட பிரீமிய தொகை ரூ.375. இதில் ரூ.94 மட்டும் கட்டினால் போதும். மீதி 75 சதவீதம் தொகையை வாரியம் செலுத்தும்.

இந்த திட்டமானது தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பிரிமியம் கட்டி புதுப்பித்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தென்னை மரம் ஏறும் தொழிலாளிக்கு ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு உறுதி செய்யப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார். இதில் வாரியத்தின் அலுவலர்கள் சங்கர் கோவிந்தன், இளவரசன், பரமசிவம் மற்றும் 60 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு காப்பீட்டு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Kera Suraksha ,Dinakaran ,
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்