×

திருநின்றவூர் ஜெயா மெட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

 

திருவள்ளூர்: சென்னையை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் பசுமை நோக்கி பயணம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து புவி வெப்பமயமாதலை தடுத்து இயற்கை சமநிலையை உருவாக்க மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் ஜெயா கல்விக் குழுமங்களின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மரக்கன்றுகளை நட்டு எந்த தன்னலமும் தெரியாத இந்த வயதில் பொதுநலம் கருதி வையம் தழைக்க வழி செய்த குழந்தைகளுக்கு ஜெயா கல்வி குழுமம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் இத்தினத்தை பசுமை தினமாக மாற்றி வளாகம் எங்கும் பசுமை நிறைய பச்சை ஆடைகள் அணிந்து, காய்கனி வேடமிட்டு, சத்துமிக்க உணவுப் பொருளான காயையும், கனிகளையும் அதிகமாக உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மழலையர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா சாலமன், ராஜாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

The post திருநின்றவூர் ஜெயா மெட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness Rally ,Jaya Matriculation School ,Thiruninnavur ,Thiruvallur ,Jaya Matric Higher Secondary School ,Chennai ,Awareness Rally in ,Jaya Matric School ,Tiruninnavur ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி