×

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர் பரிக்ரமா திட்டம்

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மீனவர்களிடம் நேற்றுமுன்தினம் குறைகளை கேட்டறிந்தனர். இதில் கலந்து கொண்ட மீனவர்கள் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி விட்டால் அவர்களின் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் கடலில் வீசியெறிந்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்கிறார்கள். என்று தெரிவித்தனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக மீனவர்களின் குறைகளை அறிவதற்காக ஒன்றிய அமைச்சர்கள், தமிழக கடலோர மாவட்ட கிராமங்களுக்கு வந்து மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்பது எதற்காக? சுமார் ஒன்பதரை வருடங்கள் ஆட்சி செய்து விட்டு மீனவர்கள் மீது திடீர் அக்கறை எதற்காக?. இன்னும் ஆறு மாதங்களில் ஒன்றிய ஆட்சி முடியப்போகிறது. இதுவரை சாதாரண மீனவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளே அதிகம் லாபம் ஈட்டினர். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருந்து, சாதாரண மீனவர்களை இப்போது சந்தித்து குறைகளை கேட்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

The post தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர் பரிக்ரமா திட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Mallipatnam Fishing Port ,Thanjavur District ,Peravurani ,Mallipatnam ,Fishing Port ,Union Minister of Fisheries ,Dinakaraan ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...