×

மானோஜிப்பட்டியில் மருத்துவ முகாம்

தஞ்சாவூர்: சேவா பாரதி தென் தமிழ்நாடு மற்றும் மகிழ்ச்சி மக்கள் நலச்சங்கம் சார்பில் தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மானோஜிப்பட்டி சுடர் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை சேவா பாரதி மாநில செயலாளர் முனியசாமி துவக்கி வைத்தார். மக்கள் நல சங்க தலைவர் கோபி வரவேற்றார். சந்தானகிருஷ்ணன் உதவிகளை செய்தார். தஞ்சாவூர் கோட்ட தலைவர் கேசவன் தலைமையில் துரை.சந்திரசேகரன், கோவிந்தராஜூ, வடிவேல், காந்திமதி கார்த்திகேயன், சுதர்சன், ஜான் விக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

The post மானோஜிப்பட்டியில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Manojipatti ,Thanjavur ,Thanjavur Manojipatti ,Seva Bharati South Tamil Nadu ,Happy People's Health Association.… ,Dinakaran ,
× RELATED சிறப்பு கல்விக்கடன் முகாம்