×

இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

ஆட்டையாம்பட்டி: சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. முன்னதாக பஸ் நிலையம் அருகில் உள்ள கம்பத்தில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் பாஜ., வலைதளத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியை ராவணனாக சித்தரித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்த கூட்டத்திற்கு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் புனிதா ஸ்டீபன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, வரும் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பற்றி எடுத்து கூறினார். கூட்டத்தில் வீரபாண்டி வட்டார தலைவர் சாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக தலைவர் அரவிந்த், தமிழரசன், தனகோபி, சாஸ்மின், சசிகலா, அருளானந்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Youth Congress Executive Committee Meeting ,Attaiyambatti ,Salem East District Youth Congress Executive Committee meeting ,Youth Congress ,Executive Committee meeting ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் பெயிண்டர் பலி