×

இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனைகள் செய்து கொண்டனர். அவர்களுக்கு தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Panchanadikulam West Panchayat ,Panchayat ,Manimekalai ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...