×

புகாரின் அடிப்படையில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கரூர்: கரூர் அருகே தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை போடப்பட்ட தார்சாலை தரமற்றதாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த கரூர் கலெக்டர், உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்ச்சாலையை புனரமைத்தல் பணி மேற்கொள்ள செயல்முறைகளில் நிர்வாகி அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு, வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த வையம்பட்டியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு செயல்முறைகளின்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேட்ச் ஒர்க் முடித்து கடந்த 6ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1050 மீட்டர் தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு முழுமையாக செட் ஆவதற்கு 48 மணி நேரம் மணி முதல் 72 மணி நேரம் வரை ஆகக்கூடிய சூழ்நிலையில் வீரசிங்கம்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டின் அருகில் இறுதியாக தார்சாலை முடிக்கப்பட்ட இடத்தில் தார்சாலை சேதப்படுத்தப்பட்டு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.

 

The post புகாரின் அடிப்படையில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். appeared first on Dinakaran.

Tags : Karur ,Dharagambatti ,Veerasinghampatti ,
× RELATED கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு