×

சேப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர் உள்பட 9 திட்டப்பகுதிகளில்ரூ.556 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னையில் 9 திட்டப்பகுதிகளில்ரூ.556.60 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில்ரூ.75.95 கோடியில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, திருவிகநகர் தொகுதி பெரியார் நகர் திட்டப்பகுதியில்ரூ.81.64 கோடியில் 448 புதிய குடியிருப்பு, வில்விவாக்கம் தொகுதி காந்தி நகர் திட்டப்பகுதியில்ரூ.83.50 கோடியில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, எழும்பூர் வேம்புலியம்மன் பகுதியில்ரூ.32.62 கோடியில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, ஆயிரம் விளக்கு தொகுதி பத்ரிக்கரை திட்டப்பகுதியில்ரூ.32.30 கோடியில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில்ரூ.29.85 கோடியில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்பு மயிலாப்பூர் தொகுதி ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் ரூ118.53 கோடியில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில்ரூ.41.08 கோடியில் 252 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பருவா நகர் திட்டப்பகுதியில்ரூ.61.13 கோடியில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்பு என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில்ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் 3,238 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கற்று புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும். தற்போது பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் 18 மாதத்தில் பணிகள் நிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், மயிலை த.வேலு, தாயகம் கவி, வெற்றி அழகன், நா.எழிலன், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழு தலைவர்கள் மதன்மோகன், சரிதா மகேஷ்குமார், கே.பி.ஜெயின், கவுன்சிலர்கள் ஜெகதீசன், அம்பேத்வளவன்(எ) குமாரசாமி, எஸ்.தனலட்சுமி, ரேமா சுரேஷ், அமிர்தவர்சினி, விமலா கிருஷ்ணமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம், வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

The post சேப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர் உள்பட 9 திட்டப்பகுதிகளில்ரூ.556 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Chepakkam ,Mylapore ,Egmore ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED சேப்பாக்கம் மைதானம் அருகே...