×

வரும் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கு இந்திய கலாசாரம், மரபுகள் பற்றிய படிப்புகளை கட்டாயமாக்க 1,000 பேராசிரியர்களுக்கு பயிற்சி: மெகா திட்டம் வகுத்து செயல்படும் யு.ஜி.சி.

சென்னை: வரும் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் முதல் ஆண்டில் இந்திய கலாசாரம் மற்றும் மரபுகள் பற்றிய 2 படிப்புகளை கட்டாயமாக்க யு.ஜி.சி திட்டமிட்டுள்ளது. அதற்காக நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக, இந்திய அறிவு முறைகள் தொடர்பான இந்திய மரபுகள், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய பாடங்களை மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு பயிற்சியை அளித்து வருகிறது. தற்போது முதல்கட்டமாக பயிற்சி வகுப்புகள் நாக்பூர், சென்னை, வாரணாசி, நகர், கவுகாத்தி மற்றும் டெல்லி ஆகிய 6 நகரங்களில் ெதாடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளில் வேதங்கள், வரலாறு, கணிதம், புராணம், ஆயுர்வேதம், இந்திய தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடத்தப்பட்டதாக பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் கூறினர். அதற்கேற்றாற்போல், அடுத்த கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் முதல் ஆண்டில் இந்திய கலாசாரம் மற்றும் மரபுகள் பற்றிய 2 படிப்புகள் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 லட்சம் பேராசிரியர்களுக்கு இந்த பயிற்சியை அளிக்க யுஜிசி முடிவு செய்துள்ளது.

The post வரும் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கு இந்திய கலாசாரம், மரபுகள் பற்றிய படிப்புகளை கட்டாயமாக்க 1,000 பேராசிரியர்களுக்கு பயிற்சி: மெகா திட்டம் வகுத்து செயல்படும் யு.ஜி.சி. appeared first on Dinakaran.

Tags : UGC ,Chennai ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...