×

தவறான தகவல்களை பிரதமர் பரப்புகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சிவகாசி: விருதுநகர், தென்காசி மக்களவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பாசறை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி முதலில் கோரிக்கை விடுத்துள்ளது. நம் நாட்டில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் 60 சதவீதம் உள்ள நிலையில் அவர்களுக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் சமநிலையை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் கோயில்களின் சொத்து கொள்ளையடிக்கப்படுவதாக தவறான கருத்தை மோடி கூறி உள்ளார். ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் புதுமுகமும் பழைய முகமும் கலந்துதான் இருக்கும். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு உண்டு. விருதுநகர், கன்னியாகுமரி தொகுதி நாங்கள் சிறப்பாக செயல்பட்ட தொகுதி. அங்கு மீண்டும் போட்டியிட விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தவறான தகவல்களை பிரதமர் பரப்புகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Shivakasi ,Constituency Polling Agents Conference and Training Meeting ,Virudunagar, ,Tenkassi ,K. S. Assaagiri ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...