×

வளி மண்டல சுழற்சி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ெ தாடர்ந்து நீடித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், கோவை ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு இடங்களில் மழையும் பெய்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரை எழுமலைப் பகுதியில் 100 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை ஆலந்தூர், 40மிமீ, சென்னையில் அம்பத்தூர், வளசரவாக்கம், 30மிமீ, மதுரவாயல், அடையாறு, வேப்பூர், பெரும்புதூரில் மழை பெய்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post வளி மண்டல சுழற்சி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Arctic Circle ,Chennai ,Tamil Nadu ,Cycle ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...