×

பேட்டிங் ஓகே, பவுலிங் எதிர்பார்த்த அளவு அமையவில்லை: தெ.ஆ. கேப்டன் பவுமா பேட்டி

புதுடெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்றுநடந்த 4வது லீக் போட்டியில் தென்ஆப்ரிக்கா-இலங்கை மோதின. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 5விக்கெட் இழப்பிற்கு 428 ரன் குவித்த நிலையில் பின்னர் களம் இறங்கிய இலங்கை 44.5 ஓவரில் 326 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 102 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின் அந்த அணி கேப்டன் பவுமா கூறியதாவது: நாங்கள் வெற்றியுடன் தொடங்க விரும்பினோம். அதைச் செய்திருக்கிறோம் இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பேட்டராக தவறு கண்டுபிடிக்க எதுவும் இல்லை. ஆனால் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எல்லாம் சிறப்பாக இருந்தது.

நாங்கள் டாசை இழந்தது எங்களுக்கு இந்த போட்டியில் ஒரு வரமாக அமைந்துவிட்டது. பவர் பிளேவுக்கு பிறகு பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இங்கு சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடனே மாறிக் கொள்வது முக்கியம். எதிர்வரும் போட்டிகளுக்கு கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டியதாக இருக்கலாம். இந்த போட்டியில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. சவால்கள் புதிதாக மீண்டும் வரும், என்றார்.
இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், 3 முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் இல்லை. 350-370 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினால் சேசிங் செய்ய முடியும் என நினைத்தோம். ஆனால் கூடுதல் ரன்களைவழஙகியதால் எங்களால் சமாளிக்க முடியவில்லை, என்றார்.

The post பேட்டிங் ஓகே, பவுலிங் எதிர்பார்த்த அளவு அமையவில்லை: தெ.ஆ. கேப்டன் பவுமா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Det. A. Captain Pauma ,Delhi ,South Africa ,Sri Lanka ,World Cup Cricket Series ,Det ,Pauma ,Dinakaraan ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...