செய்யாறு, அக்.8: செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா இருங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பொன்னம்மாள்(55), ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் பொன்னம்மாள் தலைமையில் நடந்தது.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ், ரகு, குப்பன், அன்பழகன் ஆகியோர் காலனி பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்துள்ளனர். மேலும் ‘அனுமதி தராவிட்டால் உன்னையும், உனது மகனையும் கொலை செய்து விடுவோம்’ என கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து பொன்னம்மாள் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகிறார்.
The post செய்யாறு அருகே ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்: 4 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.
